வங்கி போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

வங்கி போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பாரத ஸ்டேட் வங்கி பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பாரத ஸ்டேட் வங்கி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆர்வமுள்ள, போட்டித் தேர்வுக்கு தயாராகும் வேலைநாடுநர்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 9487375737, 8668123775 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in