‘திருப்பூரில் 14-ம் தேதி முதல்தொடர் காத்திருப்பு போராட்டம்’

‘திருப்பூரில் 14-ம் தேதி முதல்தொடர் காத்திருப்பு போராட்டம்’
Updated on
1 min read

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் திருப்பூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், திருப்பூரில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சின்னச்சாமி தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார் செயல் திட்டத்தை முன்வைத்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் உட்பட பல்வேறு விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் விரோத சட்டங்களைதிரும்பப்பெறக்கோரியும், மின்சார திருத்த மசோதாவை கைவிட கோரியும் டெல்லியில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 14-ம் தேதி காலை 10 மணி முதல் திருப்பூர்மாவட்டஆட்சியர் அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது, இதற்காக மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோருவது எனவும் அனைத்து விவசாயிகளும் இதில் பங்கேற்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in