சிதம்பரம் அருகே வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு கே.பாலகிருஷ்ணன் ஆறுதல்

சிதம்பரம் அருகே வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு கே.பாலகிருஷ்ணன் ஆறுதல்
Updated on
1 min read

சிதம்பரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சிதம்பரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அகரநல்லூர், வேளக்குடி, பழையநல்லூர், கண்டி யாமேடு, வையூர், காட்டுகூடலூர் மற்றும் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி, வீரநத்தம், திருநாரையூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் வசபுத்தூர், கனகரப்பட்டு, பிச்சாவரம், கரிக்குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேற்று வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள், கரும்பு வயல்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

இவருடன் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநிலகுழு உறுப்பினர் மூசா, மாவட்டசெயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் உடன் சென்று பார்வையிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in