

திண்டுக்கல் மாவட்டக் காவல் துறையில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், போலீஸார் என மொத்தம் 17 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் குணமடைந்து நேற்று மீண்டும் பணிக்குத் திரும்பினர்.
கரோனா தொற்றில் குணமடைந்தவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. டி.ஐ.ஜி. முத்துச்சாமி தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா பழங்கள் வழங்கி வரவேற்றார். டி.ஐ.ஜி. முத்துச்சாமி அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக சிகிச்சை முடிந்து பணிக்கு வந்த போலீஸாருக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.