

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகிலுள்ள சங்கமங்கலத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு தர்ஷன் என்ற 4 வயது மகன், 2 வயதில் மற்றொரு ஆண் குழந்தையும் உள்ளது.
அதிமுகவின் ஏழைத் தொண்டரான ராமகிருஷ்ணனும், அவரது மனைவியும் கடந்த 4-ம் தேதி கைக் குழந்தை யை மட்டும் தூக்கிக்கொண்டு தர்ஷனை வீட்டில் விட்டு விட்டு சிவகங்கையில் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிக்குச் சென் றனர். தாத்தாவுடன் இருந்த தர்ஷன் தாயைத் தேடி சங்கமங் கலம் சாலைப் பகுதிக்குச் சென்ற போது கார் மோதி உயிரிழந் தான். மானாமதுரை போலீஸார் விசாரிக்கின்றனர்.
தகவல் அறிந்த மானா மதுரை எம்எல்ஏ நாகராஜ், ராமகிருஷ் ணன் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினார். இருப்பினும், குழந்தையை இழந்து தவிக்கும் ராமகிருஷ்ணனின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதி கேட்டு எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அவ ருக்கு உதவி கிடைக்க அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட அதிமுக செய லர் செந்தில்நாதன் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என, அக்குடும்பத்தினர் மற்றும் அதிமுக வினர் கோரிக்கை விடுத் துள்ளனர்.