உபகரணங்கள் வழங்க மாற்றுத் திறனாளிகள் தேர்வு

உபகரணங்கள் வழங்க மாற்றுத் திறனாளிகள் தேர்வு
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மற்றும் மத்திய அரசு நிறுவனமான அலிம்கோ ஆகியவை ஒருங்கிணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கத் தகுதி யானவர்களைத் தேர்வு செய்தி டவும், பயனாளிகளுக்கு உதவி உப கரணங் களுக்கான அளவீடு மேற்கொள் வதற்கும் சிறப்பு முகாமை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தி வருகிறது. இச்சிறப்பு முகாமில் 14 வகையான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கு அரசு எலும்பு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மற்றும் மன நல மருத்துவரை கொண்டு, பயனாளி களைத் தேர்வு செய்கின்றனர்.

அதன்படி போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். இதில் 135 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். 105 பேர் பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கத் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத் திறனாளி கள் நல அலுவலர் கு.ஜோதி லிங்கம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு முகாம்

இச்சிறப்பு முகாம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறுகிறது. டிச.11-ல் நயினார்கோவிலிலும், டிச.14-ல் பரமக்குடியிலும், டிச.15-ல் கமுதி யிலும், 16-ம் தேதி கடலாடியிலும், 17-ம் தேதி முதுகுளத்தூரிலும், 18-ல் ராமநாதபு ரத்திலும், 19-ல் உச்சிப்புளியிலும் நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in