

மதுரை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் அனுராதா தலைமையில் போலீஸார் கடந்த 9-ம் தேதி ரோந்து சென்றனர். சின்னக்கடை வீதி அருகே எழுத்தாணிக்காரர் தெருவில் ஒரு கடையில் சில்லரை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 475 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சின்னக்கடை தெருவைச் சேர்ந்த அசோக்குமார்(50), வில்லாபுரம் முத்துப் பாண்டி(53), சாய்ராம்(57) ஆகியோரை தெற்குவாசல் போலீஸார் கைது செய்தனர்.