விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

புதிய வேளாண் சட்டத்தைக் கண்டித்து டெல்லியில் போராட் டம் நடத்தும் விவசாயி களை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் ராமநாதபுரத்தில் புறநகர் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கட்சியின் மண்டலச் செயலர் யாசின் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சபீர், துணச் செயலர் பிரபாகரன், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் நாகேசுவரன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.கலையரசன், எஸ்டிபிஐ நகர் தலைவர் நஜ்முதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரத்தில் சாலைகள் சேதம், கழிவு நீருடன் மழை நீர் தேங்குவது ஆகியவற்றை சீர்படுத்தக் கோரி நாம் தமிழர் கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in