முதல்வருக்கு கிராம ஊழியர் சங்கம் மனு

முதல்வருக்கு கிராம ஊழியர் சங்கம் மனு
Updated on
1 min read

14 அம்சக் கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி முதல்வருக்கு அனுப்பும் மனுவை தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் விருதுநகர் ஆட்சியரிடம் வழங்கினர்.

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், நாள் கணக்கில் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். ஜமாபந்தி படி வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இயற்கை இடர்பாடு இணையப்படி வழங்குவதுபோல் கிராம ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். ஊதியத்தில் 50 சதவிகித ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராம ஊழியர் பணிக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஆள் தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிச.17-ல் வட்டாட்சியர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in