

சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு அதிமுக நகரச் செயலாளர் இப்ராஹிம்ஷா தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். இதையடுத்து அங்கிருந்த ஊழியரிடம் இப்ராஹிம்ஷா அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்தார்.
அதேபோல் அவரது ஆதரவாளர் ஒரு வரும் பேரூராட்சி ஊழியரை மிரட்டும் தோரணையில் பேசினார். இதனால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோ குறித்து பேரூராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து யாரும் புகார் கொடுக்கவில்லை என்று கூறினார்.