

மூதறிஞர் ராஜாஜியின் 142-வது பிறந்த நாள் விழா ஓசூர் தொரப்பள்ளியில் உள்ள அவருடைய நினைவு இல்லத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி கலந்து கொண்டு நினைவு இல்லத்தில் உள்ள ராஜாஜி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் ராஜாஜி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நினைவு இல்லத்தில் உள்ள புகைப்படக் கண்காட் சியைப் பார்வையிட்டார்.
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஏ.சத்யா, ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன், வட்டாட்சியர் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆப்தாபேகம், ராமச்சந்திரன், ஓசூர் ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கடசாமி, ஒன்றிய குழு துணைத்தலைவர் நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.