

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் ந.மகாலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒரு மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தி லிருந்து மற்றொரு மாவட்ட அலுவலகத்துக்கு வேலை வாய்ப்பு அடையாள அட்டையை பதிவு மாற்றம் செய்ய சுயசான்றுஅளிக்கப்பட்ட குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது. இந்த வாய்ப்பை பதிவுதாரர்கள் பயன்படுத்திக் கொண்டு பதிவு மாற்றம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.