

எதிர்காலத் திட்டங்களில் ஸ்டாலி னுக்கு பொதுநோக்கம் ஏதும் இல்லை என அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டினார்.
மதுரை வைகை ஆற்றில் ஏவி மேம்பாலப் பகுதி தடுப்பணையில் இருந்து தெப்பக்குளத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாயையும், தெப்பக் குளத்தையும் பார்வையிட்டு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
மதுரை அருகே பனையூர் கால்வாயில் இருந்து தெப்பக்குளத்துக்கு நீர் வரும் வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது, தற்போது தெப்பக்குளம் 3-வது முறையாக நிரம்பிஉள்ளது. மதுரையின் நூறு வார்டுகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட ஊருணிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. நான்கு வழிச்சாலை திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட போது அது எதிர்காலத் திட்டம் என்பதால் ஜெயலலிதா எதிர்க்கவில்லை. ஆனால், தற்போது அதுபோன்ற பொது நோக்கம் ஸ்டாலினுக்கு இல்லை என்றார்.