புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டங்களை  திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பொதிகை டிவி-யில் சமஸ்கிருத ஒளிபரப்பை உடனே நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி வானொலி நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் சீனி.விடுதலை அரசு தலைமை வகித்தார். பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கி.கமலக்கண்ணன், ஜெ.வின்சென்ட், செங்கை குயிலி, மனோகர், ராஜாங்கம், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழாதன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஆரோக்கியசாமி, ஆதித் தமிழர் பேரவையின் அருந்ததி அரசு, மக்கள் உரிமை மீட்பு மையத்தின் பஷீர், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் இக்பால், தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் கென்னடி, தமிழ்ப் புலிகள் கட்சியின் ரமணா, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் நிலவழகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in