

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத் துக்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஆட்சியர் ப.வெங்கட பிரியாவிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளது:
உள்ளாட்சி தேர்தல் முடிந்து ஓராண்டு முடிவடையும் நிலையில், மாநில அரசின் நிதி ஊராட்சிகளுக்கு வருவதில்லை. ஆகையால் மாநில அரசின் நிதி ஊராட்சிகளுக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10 மாதங்களாக ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மாநில நிதிக் குழு மானிய நிதியை உடனடியாகவும், மாதம் தவறாமலும் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து ஊராட்சிகளுக்கும் பாகுபாடு இல்லாமல் பிரித்து வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.