மணப்பாறை, லால்குடி, திருவெறும்பூரில் நாளை அதிமுக வாக்குச்சாவடி மகளிர் குழு தொடக்க விழா

மணப்பாறை, லால்குடி, திருவெறும்பூரில் நாளை அதிமுக வாக்குச்சாவடி மகளிர் குழு தொடக்க விழா
Updated on
1 min read

அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட மணப் பாறை, லால்குடி, திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி மகளிர் குழு தொடக்க விழா நாளை (டிச.11) நடைபெற உள்ளது.

இதுகுறித்து அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செய லாளரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான ப.குமார் தெரி வித்துள்ளது: திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள மணப் பாறை, லால்குடி, திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக் குட்பட்ட வாக்குச்சாவடிகள் வாரியாக மகளிர் குழு தொடக்க விழா மற்றும் பூத் கமிட்டி கையேடுகள் வழங்கும் விழா டிச.11-ம் தேதி காலை 10.15 மணிக்கு மணப்பாறையிலும், பகல் 12 மணிக்கு திருவெறும்பூரிலும், மாலை 3 மணிக்கு லால்குடியிலும் நடைபெற உள்ளன.

இந்நிகழ்ச்சிகளில் தமிழக மின்சாரத்துறை அமைச்சரும், அதிமுக மண்டல பொறுப்பாள ருமான பி.தங்கமணி பங்கேற்று, ஆலோசனைகள் வழங்கவுள்ளார். இதில், அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள், செயல்வீரர்கள், அந்தந்த பகுதி மகளிர் குழு மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in