

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே ராமசாமி நகரை சேர்ந்தவர் ரம்யாதேவி. இவரது கணவர் திலீப்குமார். டிச.6-ம் தேதி இரவு இவர்களது வீட்டுக்குள் புகுந்த திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த பெர்னாண்டோ ஜார்ஜ்(24), மாரிமுத்து(28), ஜான்பீட்டர்(31) ஆகியோர் அரிவாளைக் காட்டி மிரட்டி, ரம்யாதேவி அணிந்தி ருந்த 11 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து மாத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரையும் நேற்று கைது செய்தனர். இதை யடுத்து மாத்தூர் போலீஸா ருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.