வேலூர் மத்திய சிறையில் 17-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

வேலூர் மத்திய சிறையில் 17-வது நாளாக   முருகன் உண்ணாவிரதம்
Updated on
1 min read

வேலூர் மத்திய சிறையில் அடைக் கப்பட்டுள்ள முருகன் நேற்று 17-வது நாளாக உண்ணா விரதத்தை தொடர்ந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் பல்வேறு கோரிக் கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 23-ம் தேதி முதல் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது உடல் நிலை சீராக உள்ளதா? என்பதை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர். உண்ணா விரதம் இருந்து வரும் முருகனுக்கு மருத்துவக்குழுவினர் 2 முறை குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.

அதேநேரத்தில், உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது. ஆனால், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்படாததால் முருகன் நேற்று 17-வது நாளாக தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார்.

அவரது உடல்நிலையை மருத் துவக்குழுவினர் தொடர்ந்து கண் காணித்து வருவதாகவும், விரை வில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் படும் என சிறைத்துறை அதிகாரி கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in