

எஸ்சி., எஸ்டி., மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தை மீண்டும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடக்கு மாவட்டச் செயலாளர் இ.கதிரேசன் தலைமை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் தகடூர்.தமிழ்செல்வன், வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் எ.பெஞ்சமின் பிராங்களின், மகளிரணி மாவட்ட அமைப்பாளர் விஜயா அந்தோணி, கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி செயலாளர் சு.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி