

சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள எம்ஜி ரோடு கார்னரில் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. இதையொட்டி, டிசம்பர் மாதம் முழுவதும் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
விழாவில், மருத்துவமனை சேர்மன் ராமமூர்த்தி குத்து விளக்கு ஏற்றிவைத்து பேசும்போது, “கோவையை தலைமையிடமாக கொண்டு தி ஐ பவுண்டேஷன் செயல்பட்டு வருகிறது. இங்கு உலகத்தரம் வாய்ந்த அனைத்து அதிநவீன கண்சிகிச்சை முறைகளும் ஏழை, எளிய மக்களுக்கும் கிடைக்கச் செய்வதை தாரக மந்தரமாக செய்து வருகிறோம். எங்களது மருத்துவமனையின் 11-வது கிளை சேலத்தில் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.
மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஸ்ரேயாஸ் ராமமூர்த்தி பேசும்போது, “தொடர்ந்து கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துவதாலும், காற்று மாசு போன்றவைகளாலும் பலர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தற்போது தொற்று நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, கைகளை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கிறோமோ, அதைப்போல நமது கண்களையும் பாதுகாப்பது அவசியம். மருத்துவமனை திறப்பு விழாவை முன்னிட்டு, டிசம்பர் மாதம் முழுவதும் கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை இலவசமாக வழங்கப்படும்” என்றார்.
விழாவில்,பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை மருத்துவர்கள் விஷ்ணு குப்புசாமி பவுன்ராஜூ, ராஜீவ் நாயர், மருத்துவர்கள் சுஷ்மா பூஜாரி, சைலேஷ் டப்கே, சேலம் மேலாளர் செந்தில், மார்க்கெட்டிங் மேலாளர் கோவிந்தசாமி மற்றும் மருத்துவமனையின் நிர்வாகிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.