

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் அம்பேத்கரின் 64-வதுநினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கும், உருவச்சிலைக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, வேலூர் நகர் பகுதியில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் சண்முகசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகன், ஆதி திராவிடர் நல விழிக்கண் மற்றும் கண்காணிப்பு அலுவலர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை
திருப்பத்தூர்
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பூங்கொடி, அலுவலக மேலாளர் பாக்கியலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வி.சி. கட்சியினர் மரியாதை