

பழவேற்காடு அருகே கோரைக்குப்பம் மீனவ கிராமத்தில், நேற்று கடலோரத்தில் ஆளில்லா சிறு விமானம் ஒன்று கரை ஒதுங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள்வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் விமானத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். மேலபாகம் பிளாஸ்டிக்கிலும், உட்பகுதிமரத்தாலும் செய்யப்பட்டுள்ள இவ்விமானத்துக்குள் எலெக்ட்ரானிக் கருவிகளும் பொருத்தப்பட்டிருந்தன. இவ்விமானம் மாணவர்களின் ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டதா அல்லது கடலோர காவல்படையினர் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறுஏதேனும் உளவுப் பணிக்காக பயன்படுத்தப்பட்டதா என விசாரித்து வருகின்றனர்.