வாடிப்பட்டியில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

வாடிப்பட்டியில் விநாயகர்  கோயில் கும்பாபிஷேகம்
Updated on
1 min read

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பெருமாள்பட்டி மந்தையில் இருக்கும் மவுன குருசாமி மடத்தின் அருகே அரச மரத்தடியில் பழமையான வலம்புரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி முதல் நாள் காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜை தொடங்கி பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. இரவு 10 மணிக்கு யந்தரி பிரதிஷ்டை, விக்ரஹ பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இரண்டாம் நாள் காலை 6 மணிக்கு இரண்டாம் கால வேள்விகள் செய்து 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. 10 மணிக்கு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கிராமத் தலைவர் வி.ஏ.ராஜாங்கம், கிராம முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in