

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. ஆலத்தூர் வட்டம், தெற்கு மாதவி கிராமத்தில் மருதையாற்றில் கரைபுரண்டு ஓடிய மழை நீர் ஊருக்குள் புகுந்ததில் 500 ஏக்கர் பரப்பளவில் அப்பகுதி யில் பயிரிடப்பட்டிருந்த மக்காச் சோளம், பருத்தி, எலுமிச்சை, மிளகாய் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
மேலும், அக்கிராமத்தில் உள்ள குடிநீர் கிணறு, குடியி ருப்புகள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகியவை மழைநீரால் சூழப்பட்டுள்ளன.
குரும்பலூர் அருகே துறையூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு சாலையோரம் இருந்த மிகவும் பழமையான புளிய மரம் காற்றில் முறிந்து விழுந்தது.