

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜமீன் பேரையூர்-கூடலூர் இடையே உள்ள மருதையாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் மேல் மழைநீர் பெருக்கெடுத்து செல்வதால், தரைப்பாலத்தில் பொதுமக்கள் செல்லவும், வாகன போக்குவரத்துக்கும் தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் ப. வெங்கடபிரியா உத்தரவிட்டுள்ளார்.
“வட கிழக்கு பருவமழையின் காரணமாக பாதுகாப்பில்லாத சூழலில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் 28 நிவாரண முகாம்களில் 375 குடும்பங்களைச் சேர்ந்த 816 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக் கும் தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்பட்டுள்ளது” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.