வெள்ளகோவில் ஊராட்சி சேனாபதிபாளையத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

வெள்ளகோவில் ஊராட்சி சேனாபதிபாளையத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
Updated on
1 min read

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் வேலப்பநாயக்கன்வலசு கிராமத்துக்கு உட்பட்ட சேனாபதிபாளையத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட தார்ச் சாலை முற்றிலும் பழுதடைந்துவிட்டது. பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள இந்த சாலையால், போக்குவரத்துக்கு மிகவும் பாதிக்கப்படுகிறது. போதிய வெளிச்சம் இல்லாத பகுதி என்பதால், இரவு நேரங்களில் விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன.

இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் சாலை சீரமைக்கப்படவில்லை. கிராம மக்களின் நலனை கருத்தில்கொண்டு, போர்க்கால அடிப்படையில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்" என்றனர்.

வெள்ளகோவில் வட்ட வளர்ச்சி அலுவலர் கூறும்போது, "ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி என்பதால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in