தாழ்வாக செல்லும் மின்கம்பியை சீரமைக்க வலியுறுத்தல்

தாழ்வாக செல்லும் மின்கம்பியை சீரமைக்க வலியுறுத்தல்
Updated on
1 min read

போயம்பாளையம் பழனிசாமி நகரில் தாழ்வாக செல்லும் மின்கம்பியை சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் போயம்பாளையம் ஆர்.கே.நகர் பிரிவு மின்வாரிய உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,

‘‘திருப்பூர் மாநகராட்சி 20-வதுவார்டுக்கு உட்பட்ட போயம்பாளையம் பழனிசாமி நகரில்மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதியில் அமைக்கப்பட்டுள்ள 3 மின்கம்பங்களுக்கு மத்தியில் இடைவெளி அதிகமாக உள்ளதால் மின்கம்பிகள் ஆபத்தான முறையில் தாழ்வாக செல்கின்றன. அங்குள்ள மின்கம்பம் ஒன்றின்அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. தாழ்வாகச் செல்லும் மின்கம்பி களை பாதுகாப்பான முறையில்சீரமைக்கவும், சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in