வாடிப்பட்டியில் ரூ. 3.5 கோடியில் பேருந்து நிலையம் புதுப்பிப்பு முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

வாடிப்பட்டியில் ரூ. 3.5 கோடியில் பேருந்து நிலையம் புதுப்பிப்பு முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
Updated on
1 min read

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை முதல்வர் கே.பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

வாடிப்பட்டி பேரூராட்சியில் இதுவரை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச் சர்கள் வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் ஒத்து ழைப்பில் சுமார் 100 கோடி மதிப்பீட்டில் புதிய நீதிமன்றக் கட்டிடம், கழிவுநீர்க் கால்வாய்கள், ஒட்டான்குளம் சீரமைப்பு, புதிய பத்திரப் பதிவு அலுவலகக் கட்டிடம் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், வாடிப்பட்டி பேருந்து நிலையம் சுமார் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கட்டு புதிதாக இரண்டு தளங்களுடன் கூடிய 30 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பேருந்து நிலையத்தை முதல்வர் கே. பழனிசாமி இன்று மதுரையில் நடைபெறும் விழாவில் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இத்தகவலை சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in