கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

Published on

திருப்பூர் மாவட்டம் மங்கலம் எம்.செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (35). திருமணமாகாத இவர், கடந்த 30-ம் தேதி காணாமல் போனார்.

இந்நிலையில் இடுவாய் பகுதியில் நடராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டக் கிணற்றில் நேற்று அவரது உடல் மிதப்பது தெரியவந்தது.

தகவலின் பேரில் மங்கலம் போலீஸார் மற்றும் பல்லடம் தீயணைப்புத் துறையினர் சென்று, அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in