Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லி விவசாயிகள் போராட் டத்துக்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரியும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இடதுசாரி அமைப்புகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் சிதம்பரம் வடக்கு வீதி தலைமை தபால் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதே போல் நெல்லிக்குப்பத்தில் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத் தாசலம் பாலக்கரையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங் கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமையேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி. சரவணன் கண்டன உரையாற்றினார்.

மக்கள் அதிகாரம், விவசாயி கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதே போல் விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய 205 பேரை போலீஸார் கைது செய்து மாலை விடுவித்தனர்.

புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி புதுச்சேரியில் விவசாயிகள் சங்கத்தினர், சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுதேசி மில்அருகே விவசாய சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட் டத்துக்கு சிறப்பு தலைவர் மாசிலாமணி, தலைவர் கீதநாதன், பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், ஏஐடியுசி பொதுச் செயலாளர் சேதுசெல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பபெற வேண்டுமென வலியு றுத்தினர். இதேபோல் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்கத்தினர் காமராஜர் சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு சங்க நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், விவசாயிக ளுக்கு எதிரான மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், வேளாண் சட்டங் களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதைநிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதைநிறுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x