குறிஞ்சிப்பாடி பகுதியில் நெற் பயிரில் மர்ம நோய் தாக்குதல் அடுத்தடுத்த வயல்களில் பரவுவதால் விவசாயிகள் கவலை

குறிஞ்சிப்பாடி பகுதியில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட நெல் வயலில் ஒன்று.
குறிஞ்சிப்பாடி பகுதியில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட நெல் வயலில் ஒன்று.
Updated on
1 min read

குறிஞ்சிப்பாடி பகுதியில் நெற் பயிர்களில் மர்ம நோய் பரவி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

குறிஞ்சிப்பாடி வட்டப்பகுதிக்கு உட்பட்ட குறிஞ்சிப்பாடி வடக்கு, குறிஞ்சிப்பாடி தெற்கு, கல்குணம், ரெட்டியார்பாளையம்,பூதம்பாடி, மேலப்புதுப்பேட்டை, வரதராஜன் பேட்டை உள்ளிட்ட 10 கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா பருவ நெல் சாகுபடி நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு மூலம் செய்யப்பட்டுள்ளது.

2 மாத நெற் பயிர்கள் இப் பகுதியில் செழித்து வளர்ந்துள்ள நிலையில், இப்பகுதியில் சில வயல்களில் மர்ம நோய் தாக்குதல் உள்ளது.

பசுமையான நெற்பயிர்கள் இடையே ஆங்காங்கே திட்டுத் திட்டாக பழுப்பு நிறத்தில் காணப் படுகிறது. அந்தப் பகுதி மட்டும் பயிர்கள் வறண்டு காணப்படுகிறது. அடுத்த சில தினங்களில் அது பெரியஅளவில் பரவத் தொடங்குகிறது.

இது தொடர்ந்து அடுத்தடுத்த வயலுக்கு பரவும் நிலை உள்ளது. இது என்ன நோய் என கண்டறிய முடியாமல் இப் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வேளாண் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு, உரிய ஆலோ சனைகளை வழங்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

“இந்நோய் மற்ற வயலுக்கும் பரவுவதற்கு முன்னர் வேளாண் துறை அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் ஆகியோர் கொண்ட குழுவினர் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in