Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

வேடசந்தூர் அருகே வயல்வெளி செயல்விளக்கப் பயிற்சி முகாம்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா விருதலை பட்டி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் வயலில் திண்டுக்கல் மாவட்ட வேளாண் துறையைசார்ந்த இணை இயக்குநர் இளையராணி தலைமையில் ஆத்மா திட்டத்தின் கீழ் நெல் நடவு மற்றும் பராமரிப்பு பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது.

வேடசந்தூர் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் பொன்.மணிவேல் சிறப்புரையாற்றினார். வேடசந்தூர் வேளாண் துணை இயக்குநர் சின்னசாமி, நெல் பயிரிடும் முறை மற்றும் பாதுகாப்பு முறைகள் பற்றி பேசினார். இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலைய மேலாளர் ஆர்.ராஜேந்திரன் மற்றும் விருதலைபட்டியை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேடசந்தூர் ஆத்மா திட்டத்தைச் சேர்ந்த சுகன்யா, ஜெயமுருகன், துரைமுருகன் செய்திருந் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x