ஈரோட்டில் மூன்றாவது நாளாக கனிமொழி தேர்தல் பிரச்சாரம்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் விவசாயிகளுடனான சந்திப்பின்போது, மனுக்களைப் பெற்ற திமுக எம்பி கனிமொழி.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் விவசாயிகளுடனான சந்திப்பின்போது, மனுக்களைப் பெற்ற திமுக எம்பி கனிமொழி.
Updated on
1 min read

ஈரோட்டில் மூன்றாவது நாளாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக மாநில மகளிரணிச் செயலாளர் எம்.பி. கனிமொழி, ஈரோடு திண்டல் செங்கோடம்பள்ளத்தில் நேற்று பிரச்சாரத்தைத் தொடங்கினார். சேனாதிப்பாளையம், வெள்ளோடு, மொடக்குறிச்சி, பெருந்துறை, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். தனது பயணத்தின்போது, பெண்கள், நெசவாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பிரச்சாரத்தின் போது திமுக மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in