

சாயல்குடி வி.வி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ராமர் (65). இவரது மகன் சக்திகுமார் (32). திருமணமாகி 3 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார். தந்தை, மகன் இருவருமே மது போதைக்கு அடிமையானவர்கள். இந்நிலையில் நேற்று காலை மதுபோதையில் இருந்த சக்திகுமார், தனது தந்தையிடம் மேலும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். அப்போது சக்திகுமார் உருட்டுக் கட்டையால் தாக்கியதில் தந்தை ராமர் உயிரிழந்தார். சாயல்குடி போலீஸார் சக்திகுமாரைத் தேடி வருகின்றனர்.