தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு மனு அளிக்க நாளை கடைசி நாள்

தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு மனு அளிக்க நாளை கடைசி நாள்

Published on

தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு, புதுப்பித்தல் கேட்பு மனுக்களை அலுவலகத்தில் சமர்ப்பிக்க நாளை (3-ம் தேதி) கடைசி நாள் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வெங்கடாசலபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கட்டுமானம், உடலுழைப்பு, ஓட்டுநர்கள் உட்பட 14 நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. நல வாரியங்களில் புதிதாக பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.

தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் கரோனா நோய் தொற்று காலமான 1.3.2020 முதல் 24.10.2020 வரை சான்றுகள் பெற்று விண்ணப்பங்களை கைவசம் வைத்திருந்தால், அவற்றை கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நாளைக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்கலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in