Published : 02 Dec 2020 03:16 AM
Last Updated : 02 Dec 2020 03:16 AM

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டம் தஞ்சை, திருச்சி, குளித்தலையில் 200-க்கும் மேற்பட்டோர் கைது

மத்திய அரசின் வேளாண் சட்டங் களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூர் மாவட்டத் தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையத்தை ஒரு வாரத்துக்கு முற்றுகையிடும் போராட்டம் நேற்று தொடங்கியது.

போராட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில் குமார், ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாவட்டச் செயலாளர் கோ.நீல மேகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 32 பெண்கள் உள்ளிட்ட 82 பேரை தஞ்சாவூர் கிழக்கு போலீஸார் கைது செய்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இதே போல, தஞ்சாவூர் மாவட் டம் அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமையில் அக்கட்சியினர் நேற்று நெல் வயலில் நின்றபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி கோரிக்கை விளக்க உரையாற் றினார். இந்த போராட்டத்தில் விவசாயிகள் ஏர் கலப்பை, மண் வெட்டியுடன் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

திருச்சியில் 2-வது நாளாக...

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் 2-வது நாளாக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரங்கம் மேம்பாலம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா தலைமை வகித்தார். கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.தர் போராட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

போராட்டத்தின்போது, ‘வேளாண் விவசாய விரோதச் சட்டத்தை பாடையில் ஏற்று வோம்’ என்ற பதாகையை பாடை யில் வைத்து, மாலையிட்டு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதை போலீஸார் பறிக்க முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு நேரிட்டது. தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

அரியமங்கலத்தில் உள்ள வங்கியை முற்றுகையிட கட்சியின் பகுதிக் குழுச் செயலாளர்கள் பொன்மலை கார்த்திகேயன், காட்டூர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாகச் சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, திருச்சி பிஎஸ் என்எல் பொது மேலாளர் அலு வலக பிரதான நுழைவுவாயில் முன் நேற்று சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ஜி.கே.ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமையிலும், புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம் குளித்தலையில் நேற்று ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் முத்துசெல்வன் உட்பட 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x