

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஆர்.எம்.எஸ். காலனி அருகேயுள்ள சிராஜ் நகரைச் சேர்ந்தவர் வி.மணிகண்டன் (43). இவர் யாகப்பா நகரில் பந்தல் அலங்கார மையம் நடத்தி வந்தார்.
இவர் கூட்டுறவு காலனியில் வசிக்கும் அக்குபங்சர் சிகிச்சை அளிக்கும் கவிதா(42) என்பவரின் வீட்டு மாடியில் கடந்த 29-ம் தேதி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த தெற்கு காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வந்தனர். இதையடுத்து மணிகண்டனின் மனைவி நித்யா அளித்த புகாரின் பேரில், தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்து கவிதாவை நேற்று கைது செய்தனர்.