கிராம வளர்ச்சி திட்டத்துக்கான  ‘வளம்' கைபேசி செயலி தொடக்கம்

கிராம வளர்ச்சி திட்டத்துக்கான ‘வளம்' கைபேசி செயலி தொடக்கம்

Published on

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தினை கிராம மக்கள் பயன் படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி ஒன்றியம் பையனப்பள்ளி ஊராட்சியில் தமிழ் நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சித் திட்டத்திற்கான ‘வளம்” செயலியை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்து கூறியதாவது:

தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் வட்டாரத்தில் 36 ஊராட்சி கள், காவேரிப்பட்டணம் வட்டாரத் தில் 36 ஊராட்சிகள் மற்றும் கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 30 ஊராட்சிகள் என மொத்தம் 102 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமத்தில் இருக்கக் கூடிய பிரச்சினைகள், எந்த இடத்தில் முதலீடு ஈட்ட வேண்டும் என மக்களே முடிவு செய்து மாவட்ட அளவில் நிதி திரட்டி செய்யக் கூடிய திட்ட மாகும். மகளிர் சுய உதவிக்குழு மூலமாக இத்திட்டம் தொடர்பான விரிவாக ஏற்கெனவே எடுத்துரைக்கப் பட்டது. மேலும், சமுதாய வல்லுநர்கள் மற்றும் கிராமப்புற பிரதிநிதி களால் இதற்காக ‘வளம்' கைபேசி செயலி மூலம் தகவல்கள் சேகரிக்கப்படும். கிராமத்தில் உள்ள மக்கள் வளர்ச்சியடைய இத்திட்டத்தை முறையாக பயன் படுத்திக் கொள்ளலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வாழ்வாதார திட்ட மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன், வட்டாட்சியர் வெங்கடேசன், ஒன்றியக்குழு தலைவர் அம்சாராஜன், ஊராட்சி மன்ற தலைவர் அமீர் ஜான், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) ராஜபிரகாஷ், வட்டார அணி தலைவர் பாஸ்கர் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in