திருவாரூர் மாவட்டத்தில் 100 இடங்களில் மத்திய அரசை கண்டித்து டிச.5-ல் இந்திய கம்யூ. சாலை, ரயில் மறியல்

திருவாரூர் மாவட்டத்தில் 100 இடங்களில் மத்திய அரசை கண்டித்து டிச.5-ல்  இந்திய கம்யூ. சாலை, ரயில் மறியல்
Updated on
1 min read

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் தொழிலாளர், விவசாய விரோத சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் திருவாரூர் மாவட்டத்தில் டிச.5-ம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம் தெரிவித்துள்ளது: தொழிலாளர் மற்றும் விவசாய விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி நகர்ப்புறத்துக்கும் விரிவுபடுத்த வேண்டும். கரோனா கால நிவாரண உதவியாக ஏழை எளிய குடும்பங்களுக்கு ரூ.7,500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், டெல்லியில் அடக்குமுறையையும் தாண்டி தங்களது கோரிக்கைகளுக்காக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருவாரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிச.5-ம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் 100 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in