அரசின் சாதனைகளை விளக்க வேண்டும் அதிமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டார்.
Updated on
1 min read

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, வைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி மகளிர் குழு அமைப்பது தொடர்பாக மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடியில் பானு பிருந்தாவன் ஹோட்டலில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ பேசியதாவது: தெற்கு மாவட்டத்தில் 805 வாக்குச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பெண்கள் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இடம் பெற வேண்டும். இந்த குழு அமைப்பதற்கு நிர்வாகிகள் கடுமையாக உழைத்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்து உள்ளது. ஆனால் திமுகவினர் தாங்கள் தான் திட்டங்களை செய்ததாக கூறி வருகின்றனர். எனவே அரசின் சாதனைகளை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகம் செய்து விளக்கி கூற வேண்டும். இன்னும் 4 மாதங்கள் உள்ளன. ஆகையால் ஆட்சியை தக்கவைக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் அவர்.

மாவட்ட இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், துணைச் செயலாளர் சந்தனம், வைகுண்டம் ஒன்றிய குழு தலைவர் வசந்தா, மகளிர் அணி செயலாளர் குருத்தாய் என்ற விண்ணரசி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in