

சென்னையை சுற்றியுள்ள காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக நீர்வரத்தால் 777 ஏரிகள் நிரம்பிஉள்ளன.
காஞ்சி, செங்கை மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில் கனமழையால் 446 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதேபோல பாசனத்துக்கு பயன்படும்80 சதவீத ஏரிகளும் நிரம்பியதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மற்ற ஏரிகளின் கரைகளும் உடையாமல் இருக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 574 ஏரிகளில் 331 ஏரிகள்முழு கொள்ளளவை எட்டின. மேலும் 54 ஏரிகளில் 80 சதவீதத்துக்கு அதிகமாக நீர் இருப்பு உள்ளது. மற்ற ஏரிகளில் 80 சதவீதத்துக்கு குறைவான நீர் இருப்பு உள்ளது.
ஏரிகள் நிரம்பி உள்ளதால்விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, “ஏரிகளை சரியாக பராமரிக்காததால் உபரிநீர் கால்வாய் வழியாக கடலில்கலந்துவருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.
முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் விவரம் மொத்த கொள்ளளவு (இருப்பு அடைப்புக்குறிக்குள்): காஞ்சிபுரம் மாவட்டம்: தாமல் ஏரி கொள்ளளவு-18.6 அடி (14),தென்னேரி-18 (17), உத்திரமேரூர்-20 (7), பெரும்புதூர்-17.60 (17), பிள்ளைப்பாக்கம்-13 (12), மணிமங்கலம்-18 (18). செங்கல்பட்டு மாவட்டம்: கொளவாய்-15 (12), பாலூர்-15 (6),பி.வி.களத்தூர்-15 (14), காயார்-15 (15), மானாமதி-14 (13), கொண்டங்கி-16 (14), சிறுதாவூர்-13 (13), தையூர்-13 (13), மதுராந்தகம்-23(23), பல்லவன்குளம்- 5.(8) அடியாக உள்ளது.