விழுப்புரத்தில் புத்தகக் கண்காட்சி

விழுப்புரம் பூமாலை வணிக வளாகத்தில் தொடங்கிய புத்தகக் கண்காட்சி நிகழ்வில் பங்கேற்றவர்களுடன் மாவட்ட நூலக அலுவலர் சுப்பிரமணியன்.
விழுப்புரம் பூமாலை வணிக வளாகத்தில் தொடங்கிய புத்தகக் கண்காட்சி நிகழ்வில் பங்கேற்றவர்களுடன் மாவட்ட நூலக அலுவலர் சுப்பிரமணியன்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்ட மைய நூலகம்,விழுப்புரம் நியூ செஞ்சுரி புக் அவுஸ்பதிப்பகம் இணைந்து 53-வதுதேசிய நூலக வார விழாவை யொட்டி விழுப்புரத்தில் புத்தகக் கண்காட்சியை நேற்று முன்தினம் தொடங்கியது. மகளிர் திட்ட உதவி அலுவலர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட நூலக அலுவலர் சுப்பிரமணியன் புத்தகக் கண் காட்சியை திறந்து வைத்தார். நியூ செஞ்சுரி புக் அவுஸ் மேலாளர் சேகர் இவ்விழாவிற்கு வருகை புரிந்தவர்களுக்கு நன்றி கூறினார்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பூமாலைவணிக வளாகத்தில் இக்கண்காட்சி நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு விற்பனையில் உள்ள நூல்களில் நியூ செஞ்சுரி புக் அவுஸ் வெளியீடுகளுக்கு 20 சதவீதமும், மற்ற வெளியீடுகளுக்கு 10 சதவீத தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in