ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர்களின் விண்ணப்ப விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர்களின் விண்ணப்ப விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள பெறப்பட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப் பேட்டை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்ட நிலையில், புதிய வாக்காளர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

18,259 பேர் விண்ணப்பம்

இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் ராணிப்பேட்டை மாவட்ட இணையதளமான ranipet.nic.in -ல் வெளியிடப்பட்டுள்ளது இவற்றை சரிபார்த்து ஆட்சேபணை இருந்தால் வாக்காளர் பதிவு அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியரிடம் தெரிவிக்கலாம். அதேபோல், வரும் டிசம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in