காளையார்கோவிலில் 137 மி.மீ. மழை

காளையார்கோவிலில் 137 மி.மீ. மழை
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நேற்று முன்தினம் இரவு 137.2 மி.மீ. மழை பதிவானது.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல இடங்களில் பலத்த மழை பெய்தது. காரைக்குடி மகர்நோன்பு பொட்டலைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சரண் (20), சாலையில் நடந்து சென்றபோது மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். மாவட்டத்தில் 86 கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் 50 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளன. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ.ல்): சிவகங்கை- 59.6, மானாமதுரை- 21, திருப்புவனம்- 86.4, தேவகோட்டை- 74.2, காரைக்குடி- 49, திருப்பத்தூர்- 39, காளையார்கோவில்- 137.2, சிங்கம்புணரி- 65.4.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in