வாக்காளர் பட்டியலில் இருந்து உயிரிழந்தோர் பெயரை நீக்க வேண்டும் விருதுநகர் ஆட்சியரிடம் திமுக எம்.எல்.ஏக்கள் மனுவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணனிடம் மனு அளித்த திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. உள்ளிட்டோர்.

Updated on
1 min read

உயிரிழந்தோர் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என திமுக வலியுறுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணனிடம் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், விருதுநகர் எம்.எல்.ஏ சீனிவாசன் ஆகியோர் மனு அளித்தனர். அதன்பின், தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 21 மற்றும் 22-ம் தேதிகளில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாமில் இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய எங்களது முகவர்கள் எழுதிக் கொடுத்ததை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, வரும் டிசம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு முகாமின்போது எங்களது வாக்குச்சாவடி முகவர்கள் வழங்கும் இறந்தவர் பட்டியலை, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மூலம் நேரடியாக விசாரணை செய்து, இறுதி வாக்காளர் பட்டியலில் இறந்தோரின் பெயர்களை நீக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in