சேலம் காவேரி மருத்துவமனையில் சர்க்கரை நோய் தினத்தையொட்டி பரிசோதனை முகாம், கண்காட்சி

சேலம் காவேரி மருத்துவமனையில் நடந்த இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாமில் மக்களுக்கு இலவசமாக பரிசோதனை, ஆலோசனை வழங்கப்பட்டது.
சேலம் காவேரி மருத்துவமனையில் நடந்த இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாமில் மக்களுக்கு இலவசமாக பரிசோதனை, ஆலோசனை வழங்கப்பட்டது.
Updated on
1 min read

ஒவ்வொரு ஆண்டும் உலக சர்க்கரை நோய் தினம் நவம்பர் 14-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சேலம் காவேரி மருத்துவமனையில் இலவச சர்க்கரை பரிசோதனை முகாம் மற்றும் கரோனா காலகட்டத்தில் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைக்கான விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

முகாமில் சுமார் 120 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவை பரிசோதிக்கப்பட்டது. பின்னர் சர்க்கரை அளவின்படி அவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு கட்டுப்பாடுகள் உணவுமுறை தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கண்காட்சியில் இடம்பெற்ற சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வகைகளை பார்வை யிட்டனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in