ஐடிஐ தேர்வு அட்டவணை மாற்றம்

ஐடிஐ  தேர்வு அட்டவணை மாற்றம்
Updated on
1 min read

தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநர் எஸ்.பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டஅரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் நவம்பர் 2020-ம் ஆண்டுக்கான தொழிற் தேர்வுகளுக்கு 23.11.2020 முதல் 02.12.2020 வரைகால அட்டவணை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 25.11.2020, 26.11.2020 மற்றும் 27.11.2020 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக இருந்த பொறியியல் வரைபடம் மற்றும் செய்முறைத் தேர்வுகள் நிவர் புயலின் காரணமாக 03.12.2020, 04.12.2020 மற்றும் 05.12.2020 ஆகிய நாட்களில் நடைபெறும் என கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர்/ முதல்வரை 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் .

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in