பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு முதல் பரிசு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திலீபனுக்கு பரிசு வழங்கிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திலீபனுக்கு பரிசு வழங்கிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
Updated on
1 min read

பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு சிறப்புப் பிரிவில் மாநில அளவில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை யில் தினசரி ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பத்தூர், மாவட்டமாக உருவாக்கப்பட்ட பிறகு அரசு தலைமை மருத்துவ மனையில் பல்வேறு கட்டமைப்பு கள் உருவாக்கப்பட்டு வருகின் றன. தமிழகத்தில் 73 அரசு மருத்துவமனைகளில் பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு சிறப்பு பிரிவுகள் செயல்பட்டு வருகின் றன. அதில், பச்சிளங் குழந்தை களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை, எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள், வெண்டிலேட்டரில் வைக்கப்படும் குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றுவது உள்ளிட்ட சிறப்பான மருத்துவ சேவைகளை செய்து வரும் அரசு மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு முதலிடம் பிடிக்கும் அரசு மருத்துவமனைக்கு தமிழக குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, பச்சிளங் குழந் தைகள் பராமரிப்பு சிறப்பு பிரிவில் இந்த ஆண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலி டம் பெற்றுள்ளது. 2-ம் இடத்தைநாமக்கல் அரசு மருத்துவமனை யும், 3-ம் இடத்தை விருதுநகர் அரசு மருத்துவமனையும் பெற்றுள்ளது. இதையொட்டி, சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்ததையொட்டி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திலீபனிடம் முதல் பரிசினை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in