

சிவகங்கை அருகே குப்பைக் கிடங்கில் குப்பையை அகற்றா ததால் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரருக்கு தினமும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் குப்பை அகற்றப்படவில்லை.
சிவகங்கை நகராட்சியில் தின மும் 21 டன் குப்பை சேகரமாகிறது. இந்த குப்பை சுந்தரநடப்பு அருகே 5 ஏக்கரில் அமைந்துள்ள நவீன குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. இக்கிடங்கு அருகேயுள்ள கண்மாய் மூலம் சுந்தரநடப்பு, துவங்கால், மணக்கரை பகுதி களைச் சேர்ந்த 200 ஏக்கர் நிலங் கள் பாசன வசதி பெறுகின்றன. குப்பைக்கிடங்கில் குப்பையை தரம் பிரிக்காமல் எரித்து வந்தனர்.
மேலும் மழைக் காலங்களில் குப்பையில் இருந்து வடியும் கழிவுநீர் கண்மாயில் கலந்தது. இதனால் கண்மாய் நீரை பயன் படுத்த முடியாததுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டது. மேலும் அந்த குப்பைக் கிடங்கை சுற்றி யுள்ள கிராமங்களில் ஈ தொல் லையும் அதிகரித்தது.
அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்ததை அடுத்து, குப்பைகளை அழிக்க ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பல கோடி ரூபாயில் மைனிங் இயந்திரம் வாங்கப்பட்டது. அதன்பின்பும் குப்பை அகற்றப்படவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சிவகங்கை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும் நீதிபதியுமான கருணாநிதி, உறுப்பினர்கள் சந்திரன், விநாய கமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் நவ.4-க்குள் குப்பையை அகற்ற வேண்டும். இல்லையென்றால் நவ.5 முதல் நகராட்சி நிர்வாகமும், ஒப்பந்த தாரரும் தனித்தனியாக ரூ.1,000 தினமும் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தர விட்டார். ஆனால் இதுவரை குப்பையை அகற்றவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘குப்பையை அகற்றாததால் கண்மாயில் கழிவுநீர் கலந்து தண்ணீர் மாசுபடுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள் ளது,’’ என்று கூறினார்.
இதுகுறித்து நகராட்சி அதிகா ரிகள் தரப்பில் கூறுகையில், ‘சுந்தரநடப்பு குப்பைக் கிடங்கில் புதிதாக குப்பைகளைக் கொட்டு வதில்லை. நகராட்சிப் பகுதியில் மூன்று இடங்களில் குப்பையை உரமாக்கி விற்பனை செய்கிறோம். ஏற்கனவே உள்ள பழைய குப்பை களை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்,’ என்று கூறினர்.