கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவி தொகைக்கு  விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

திருவள்ளூர் ஆட்சியரின் செய்திக்குறிப்பு: சிறுபான்மை இன மாணவ – மாணவியர் 2020-21ம் கல்வி ஆண்டுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகையைப் பெற புதிதாக விண்ணப்பம் செய்யவும், புதுப்பிக்கவும் அக்.31 வரை இருந்த கால அவகாசமானது, வரும் நவ.30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெற தகுதியான, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மை இன மாணவர்கள் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் வரும் நவ.30-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in